Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் தொடர்ந்து வந்த யுத்தத்தினால் வடக்கு, கிழக்கிலுள்ள மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிற போதிலும், நல்லிணக்கம் என்பது தெற்கிலுள்ள மக்களிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் ஆற்றப்படுத்தப்படவேண்டும். அம்மக்களுடன் அமைதியாக வாழ்வதற்கான நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படவேண்டும் என்ற மனோநிலை தெற்கு மக்களிடம் வளர்க்கப்படவேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிரைச் சங்கங்களின் செயலாளர் நாயகம் திரு. எல்ஹாஜ் அஸ்ஸி, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்லிணக்கத்தைப் பற்றி பேசும்போதெல்லாம் சர்வதேச முகவர் நிறுவனங்களும, சமூகங்களும் மக்களிடம் நல்லிணக்கத்தைத் தேடி வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள முன்னாள் மோதல் பிரதேசங்களுக்கு விரைகின்றனர் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, “நல்லிணக்கம் மக்களிடமிருந்து வரவேண்டுமேயல்லாமல், வெளித்தூண்டுதல்களின் காரணமாகவல்ல“ என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சுதந்திரதின நிகழ்வின்போது தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பாட அனுமதிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு குறிப்பிடத்தக்க ஒருதொகை மக்கள் பிரிவினர்களிடமிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவேதான் தெற்கிலுள்ள மக்களின் மனோநிலையை மாற்றுவது அவசியமாகும். தெற்கிலுள்ள மக்களின் மனங்களில், குறிப்பாக வளர்ந்தவர்களிடமே நல்லிணக்கம் விதைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இளம் தலைமுறையிடம் நிலைமை இதற்கு சாதகமானதாகவேயுள்ளது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

0 Responses to நல்லிணக்கம் தெற்கிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com