Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனும், தற்போது இடைநீக்கப்பட்டுள்ள கடற்படை வீரருமான யோசித்த ராஜபக்ஷ, கடற்படையில் இருந்த காலத்தில் 27 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சுட்டிக்காட்டியுள்ளது.

கடற்படையில் இரண்டாம் லெப்ரினன் தர அதிகாரியொருவர் இத்தனைமுறை வெளிநாடுகளுக்கு செல்வதற்கான அனுமதியை வழங்கியமை தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா?; என்றும் மக்கள் விடுதலை முன்னணியினால் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மொழி மூல கேள்வி நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விகளுக்கு இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்த்தன பதிலளித்தார்.

இதன்போது, மீண்டும் குறுக்கிட்ட நளிந்த ஜயதிஸ்ஸ, "உக்ரைன் பல்கலைக்கழகம் லெப்டினன் தர அதிகாரியொருவரைத்தான் கேட்டிருந்தது. ஆனால், உதவி லெப்டினனாக இருந்த யோசித்தவுக்கு ரஷ்யாவின் துதுவராக இருந்த அவரின் (யோஷிதவின் ) மாமா அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு யோசிதவின் சித்தப்பாவான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சிபாரிசு செய்துள்ளார். அதற்கு பாதுகாப்பு அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார். மாமா அழைப்பு விடுக்க - சித்தப்பாக பெயர் சிபாரிசு செய்ய - அப்பா அனுமதி வழங்க என்ற நடைமுறையே கடற்படையில் இருந்துள்ளன. இவற்றுக்கு எதிராக விசாரணை நடத்தப்படுமா?." என்று வினவினார்.

"முன்னாள் கடற்படை தளபதியின் அனுமதியும் இருந்துள்ளது. மேலதிக விவரங்கள் பற்றி முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரிடம்தான் வினவவேண்டும்" என்று இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

0 Responses to மாமா அழைப்பில்; சித்தப்பா சிபாரிசில்; அப்பா அனுமதியில் யோசித்த ராஜபக்ஷ வெளிநாடுகளுக்கு பறந்துள்ளார்: ஜே.வி.பி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com