Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தகவல் அறியும் சட்டமூலத்திற்கு வடக்கு மாகாண சபை திருத்தங்களுடன் நேற்று வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

திருத்தங்களுடன் சட்டமூலத்திற்கான ஒப்புதல் பாராளுமன்றின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் தகவல் அறியும் சட்டமூலத்திற்கான ஒப்புதல் கோரி வடக்கு மாகாண சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி ஆளுநரினால் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதன் பின்னர் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நேற்றைய தினம் சட்டம் தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

இதில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திருத்தங்கள் சிலவற்றை முன்வைத்தார். இதன் பின்னர் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு திருத்தங்களைக் குறிப்பிட்டனர். அதன்பின்னர் இடம்பெற்ற விவாதங்களை அடுத்து, சட்டமூலத்திற்கான அனுமதி வழங்கப்பட்டது.

0 Responses to தகவல் அறியும் சட்டமூலத்திற்கு வடக்கு மாகாண சபை திருத்தங்களுடம் ஒப்புதல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com