Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எஸ்விஎஸ் கல்லூரி தாளாளர் வாசுகியின் ஜாமீன் மனுவை நிராகரிதத்து சென்னை உயர் நீதிமன்றம்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரியில் கடந்த ஜனவரி மாதம் மர்மமான முறையில் 3 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அக்கல்லூரி தாளாளர் வாசுகி, அவரது மகன் மற்றும் உதவியாளர் மூவரையும் கைது செய்து சிபிசிஐடி வழக்கை விசாரித்து வருகிறது.

இவர்கள் மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர். அப்போது மூவரின் மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இப்போது மீண்டும் இவர்கள் மூவரும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தாளாளர் வாசுகிக்கு ஜாமீன் தர மறுப்புத்தெரிவித்த நீதிபதிகள், வாசுகியின் மகன் மற்றும் உதவியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளனர்.சிபிசிஐடி முன் தினமும் ஆஜராக வேண்டும் என்பது நிபந்தனை என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to எஸ்விஎஸ் கல்லூரி தாளாளரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com