Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாஜகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக குழு டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால்,தேமுதிக மறுப்பு தெரிவித்துள்ளது .

கடந்த வாரம் மத்திய அமைச்சரும் பாஜகவின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்திருந்தார். அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவர் சந்தித்தார். ஆனால், அப்போது கூட்டணிப் பேச்சுவார்த்தை இல்லை, மரியாதை நிமித்தமான சந்திப்புத்தான் இது என்று விஜயகாந்த் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், இன்று தேமுதிகவினர் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஃபியூஸ் கோயல் மற்றும் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர் ராவ், அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் இவர்களை சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இத்தகவலை உறுதிப்படுத்த பொன்.ராதா கிருஷ்ணன் மறுத்துள்ளார். முரளிதர் ராவைக் கேட்டால்தான் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

ஆனால் மேற்கண்ட தகவல் வெறும் வதந்தி என்று தேமுதிக மறுப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் கூட்டணிக் குறித்து டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் தேமுதிகவுக்கு இல்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளது அக்கட்சி. மேலும், தேமுதிகவின் இளைஞரணி செயலளார் சுதீஷ், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்றும் அக்கட்சி வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to பாஜகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக குழு டெல்லி பயணம்?: தேமுதிக மறுப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com