தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் சாய்வு தள பாதை அமைப்பதுக் குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் சாய்வு தள பாதை இல்லை என்றும், ஆபத்துக் காலங்களில் மருத்துவமனயை விட்டு மாற்றுத் திறநாளிகள், நோயாளிகள் வெளியேறுவது கடினம் என்றும் பொது நல மனு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலானது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக சுகதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் நேரில் ஆஜராகி இருந்தார்.
மனுதாரரின் மனுவுக்கு தீயணைப்புத் துறை, காவல்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகள் சார்பில் பதில் அளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இதுவரை மனுதாரரின் புகார் குறித்து சுகாதாரத்துறை எடுத்து இருக்கும் நடவடிக்கைகள் என்ன என்றும் கேள்வி எழுப்பினர் என்று தெரிய வருகிறது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 21ம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

0 Responses to மருத்துவமனைகளில் சாய்வு தள பாதை அமைப்பது குறித்த வழக்கு விசாரணை!