Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசியலைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்தறிவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை நாளை மறுதினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளது.

இதன்போது தமது குழுவின் செயற்பாடுகள் குறித்தும், இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ள மக்கள் கருத்துகள் சம்பந்தமாகவும் எதிர்க்கட்சித் தலைவருக்கு விளக்கமளிக்கப்படும் என்று மேற்படி குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்துரையாடுவதற்கு நேரம் கோரப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசமைப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்தறிவதற்காக குழுவொன்றை அரசாங்கம் அமைத்தது. இதில் தற்போது 20 பேர் அங்கம் வகிக்கின்றனர். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் சிவில் அமைப்பினரும் உறுப்பினராக இருக்கின்றனர். இந்தக் குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், ஆரம்பகட்டப் பணிகளை அது நிறைவுசெய்துள்ளது.

அதாவது, 25 மாவட்டங்களுக்கும் நேரில் பயணம் செய்து மக்களின் கருத்துகளைப் பதிவுசெய்ததுடன், மகஜர்களையும் கையேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சில மாவட்டங்களுக்கு குறித்த குழு மீண்டும் செல்லவுள்ளது. அதன்பின்னர் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று ஏப்ரல் மாத இறுதிக்குள் அது அரசாங்கத்திடம் கையளிக்கப்படும்.

0 Responses to புதிய அரசியலைப்பு தொடர்பில் கருத்தறியும் குழு சம்பந்தனோடு கலந்துரையாடவுள்ளது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com