Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூரும் முகமாக நினைவுத் தூபியொன்று யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவுக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நினைவுத் தூபியை ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், யாழ்.ஊடக அமையம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு அமைப்பு ஆகியன மேற்கொண்ட 'பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றிணையும் ஒற்றுமைப் பயணம். வாருங்கள் ஒன்றாய் சுவாசிக்க' என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற வடக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர் இணைப்பு நிகழ்வின் ஓர் அங்கமாக இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

0 Responses to யாழில் ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com