Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரகாஷ் ஜவடேகர் கருத்து அதிகாரப்பூர்வமற்ற தகவல் என்று,பஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரும், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர், ஆங்கில இணைய தள நாளிதழ் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளத்துக் குறித்து தமிழிசை மறுப்புத் தெரிவித்துள்ளார். அப்போது, பிரகாஷ் ஜவடேகர், பிரேமலதா விஜயகாந்துடன் கூட்டணிக் குறித்துப் பேச உள்ளதாகவும், பிரேமலதா இன்று தொகுதிப் பங்கீடுக் குறித்துப் பேச டெல்லி செல்வதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு ஜவடேகர் மறுப்புத் தெரிவிக்காத பட்சத்தில், இது பாஜகவின் அதிகாரப்பூர்வமற்ற தகவல் என்று தமிழிசை சவுந்திரராஜன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

எங்களது கட்சிக்கு என்று ஒரு வழிமுறை உள்ளது என்றும், அப்படிப்பட்ட விதங்களில்தான் கூட்டணிக் குறித்தப் பேச்சுவார்த்தை நடைப்பெறும் என்றும் தமிழிசை மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to பிரகாஷ் ஜவடேகர் கருத்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்: தமிழிசை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com