புதன்கிழமை நியூசிலாந்தில் அந்நாட்டுக் கொடியின் வடிவத்தை அப்படியே வைத்திருப்பதா அல்லது மாற்றம் செய்வதா என்பது குறித்த வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.
நியூசிலாந்துக் கொடியின் தற்போதைய வடிவத்தில் பிரிட்டன் கொடியில் உள்ளது போன்ற யூனியன் ஜேக் என்ற அதே அமைப்பு இடம்பெற்றிருப்பதை நீக்கம் செய்து சில்வர் நிறத்தில் பறவையின் இறகை அதில் இடம்பெறச் செய்ய பெரும்பாலனவர்கள் விருப்பம் தெரிவித்து இருந்தனர். இதையடுத்தே புதன்கிழமை வாக்கெடுப்பு தொடங்கப் பட்டுள்ளது.
கடந்த ஒரு நூற்றாண்டாக நியூசிலாந்துக் கொடியில் பிரிட்டனின் யூனியன் ஜேக் இடம்பெற்று வருகின்றது. இதற்குக் காரணம் நியூசிலாந்து பிரிட்டனின் முன்னால் காலனியாக இருந்தமையே ஆகும். இதைத் தவிர தற்போதைய நியூசிலாந்துக் கொடியில் நம் பூமியில் தென் துருவப் பகுதியில் மாத்திரமே தென்படும் தென் சிலுவை என்ற நட்சத்திரத் தொகுதியை பிரதிபலிக்கும் நட்சத்திரங்களும் உள்ளன. இந்த நட்சத்திரத் தொகுதி புதிய கொடியிலும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்துக் கொடியில் மாற்றம் கொண்டு வர விரும்புவர்கள் அதற்குக் கூறும் முக்கிய காரணம் எமது தேசத்தின் கொடி அவுஸ்திரேலியக் கொடிக்கு 99% ஒப்பாக உள்ளதே என்பது தான்.
அவுஸ்திரேலியக் கொடியில் பிரிட்டனின் யூனியன் ஜேக், தென் சிலுவை நட்சத்திரங்களுடன் மேலதிகமாக யூனியன் ஜேக்குக்குக் கீழே ஒரு நட்சத்திரம் என்பன அமைந்துள்ளன. இந்த ஒற்றுமை காரணமாக வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியத் தலைவர்கள் தாம் இடம் மாறி ஒருவரின் ஆசனத்தில் இன்னொருவர் அமர்ந்த வேடிக்கையான சம்பவங்களும் பதிவாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து குடிமக்களுக்கு மார்ச் 24 ஆம் திகதி வரை தமது தேசத்தின் கொடியைத் தேர்வு செய்ய வாக்களிக்க அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.

0 Responses to நியூசிலாந்தில் அந்நாட்டுக் கொடியின் வடிவத்தை மாற்றுவது குறித்த வாக்கெடுப்பு!