நிலக்கண்ணி வெடி தடை தொடர்பிலான ஒப்பந்தமான ‘ஒட்டோவா உடன்படிக்கையில்’ கைச்சாத்திடுவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.
நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்தினை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மாநாடு ஒன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையானது இலங்கையில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவினை மேலும் அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வது குறித்து, அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ரவிநாத ஆரியசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்
1997ஆம் ஆண்டில் ஆட்களுக்கு எதிரான கண்ணி வெடிகளை உபயோகித்தல், சேமித்து வைத்தல், தயாரித்தல், இடமாற்றம் செய்தல் ஆகியவற்றை தடைசெய்து அவற்றை அழிப்பது சம்பந்தமாக உருவாக்கப்பட்டதே ஓட்டோவா உடன்படிக்கையாகும். இந்த ஒப்பந்தம் 1999ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி நடைமுறைக்கு வந்தது.

0 Responses to நிலக்கண்ணி வெடிக்கு எதிரான ஒட்டோவா உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கை தீர்மானம்!