Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வங்கிக் கடனில் ஒரு பைசா பாக்கி இல்லாமல் விஜய் மல்லையாவிடம் வசூலிப்போம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில் தமது கிங் ஃபிஷர் விமான நிறுவனத்துக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவு கடன் வாங்கி அவற்றை வாரா கடன்கள் பட்டியலில் சேர்த்துள்ளார் விஜய் மல்லையா. இவர் மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கப் பிரிவும் இவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், விஜய் மல்லையா லலித் மோடி போல வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாவண்ணம் அவரது பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்று வங்கிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த 2ம் திகதியே விஜய் மல்லையா லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்று மத்திய அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த பிரச்னையை எழுப்பிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், விஜய் மல்லையா ஒன்றும் அடையாளம் காணப்பட முடியாத நபர் இல்லை என்றும், அவர் ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் வந்தாலும் அவரை எளிதாக அடையலாம் காண முடியும் என்றும் கூறியுள்ளதோடு, அவர் மத்திய அரசுதான் காப்பாற்றி அனுப்பி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய அருண்ஜெட்லி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் விஜய் மல்லையாவுக்கு கடன் வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும், அவர் வங்கிகளில் பெற்று இருக்கும் கடனை ஒரு பைசா பாக்கி இல்லாமல் மத்திய அரசு வசூலிக்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஒரு பைசா பாக்கி இல்லாமல் விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிப்போம்; அருண்ஜெட்லி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com