Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத் தேர்தல் ஆணையம், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு குறும்படங்களில் நடிக்க பிரபல நடிகர்களான ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் தெரிய வருகிறது.

தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம்களை அங்கங்கு நடத்தி வருகிறார். இவரின் விழிப்புணர்வு முகாம்களுக்கு மாணவர்கள் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றனர். இதில் முக்கிய அமசமாக முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து விழிப்புணர்வு குறும்படங்களை அங்கங்கு திரையிடவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று லக்கானி கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா ஏற்கனவே ஒரு குறும்படத்தில் நடித்துள்ள நிலையில், நடிகை நயன்தாரா ஒரு விழிப்புணர்வு குறும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.இந்நிலையில் ஒரு விழிப்புணர்வு குறும்படத்தில் நடிக்க ரஜினி காந்த் மற்றும் கமலுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளதாம்.

0 Responses to வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு குறும்படங்களில் நடிக்க ரஜினி கமலுக்கு அழைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com