Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இணையத்தளங்களை தடை செய்வது தொடர்பாக அரசாங்கத்தினால் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை. இணையத்தளங்களை தடை செய்யும் எண்ணம் ஏதும் கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இணைய தளங்கள் தடை செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு விரைவில் தகவல்களை தெரிந்து கொள்ளக்கூடிய ஊடமாக இணைய ஊடகங்கள் பிரபல்யம் அடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலையில் இணைய தளங்களை முடக்குவதற்கோ அல்லது தடை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் இணைய தளங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் அதன் ஓர் கட்டமாகவே இணைய தளங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to இணையத்தளங்களை தடை செய்யும் எண்ணம் அரசுக்கு கிடையாது: ஜனாதிபதி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com