Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பரோல் கேட்டு நளினி மனுத் தாக்கல்

பதிந்தவர்: தம்பியன் 07 March 2016

3 நாட்கள் பரோல் கேட்டு நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினியின் தந்தை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு சிறையில் இருந்து வெளியே வந்த நளினி, இப்போது தந்தையின் 16 வது நாள் சடங்குக்கு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பரோல் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சிறைத் துறை கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்ட மனுவுக்கு எந்த ஒரு முடிவும் தெரியாத பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் வழக்கறிஞர் இந்த பரோல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு நாளை விசாரனைக்கு வரும் என்று தெரிய வருகிறது. வருகிற 8-9-10 ஆகிய மூன்று நாட்களுக்கும் அவர் பரோல் கேட்டு விண்ணப்பித்து உள்ளார் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to பரோல் கேட்டு நளினி மனுத் தாக்கல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com