Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் பங்களிப்பு அவசியமானது என்று முன்னாள் இராணுவத்தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை தன்னுடைய கன்னியுரையை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாவது, “இறுதி மோதல்களில் வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை சுட்டுக் கொன்றமை தொடர்பிலான விசாரணைகளின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் பங்களிப்பு அவசியமானது. அப்போதுதான், நம் நாட்டில் மீது விழுந்திருக்கும் அவப்பெயரை நீக்க முடியும்.

நான் சர்வதேச நியமங்களுக்கு ஏற்பவே படைகளை வழிநடத்தினேன். போர்க்குற்றவாளிகள் இருந்தால் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே.” என்றுள்ளார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்களின் பங்களிப்பு அவசியம்: சரத் பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com