இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் விசேட இணைப்பாளர் ரொட் புஜ் வால்ட்டுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது, பொறுப்புக்கூறல் விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் மன்பிரீத் ஆனந்த் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

0 Responses to அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் விசேட இணைப்பாளர்- சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு!