Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புத்தாண்டின் சுப நேரமும் கூட அரசாங்கத்தின் தேவைகளுக்கு ஏற்பவே இம்முறை கணிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி மல்வத்தை- அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை இன்று சனிக்கிழமை காலை சந்தித்து முன்னாள் ஜனாதிபதி ஆசி பெற்றார். அதன்பின், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்தப் புத்தாண்டின் சுப நேரம் மாலை வேளையில் ஏன் வந்தது என்று எனக்கும் அறியக்கிடைத்தது. அது, அரசாங்கத்தின் தேவைகளுக்கான கணிக்கப்பட்டுள்ளதாக ஜோதிடர்கள் சிலர் என்னிடம் கூறினார்கள். அந்த சுப நேரத்தை எடுக்க வேண்டாம் என்றும் சிலர் எனக்கு கூறினார்கள். ஆனாலும், பொதுவாக நாம் அந்த நேரத்தையே எடுத்தோம்.

அரசாங்கத்தின் தேவைக்கேற்ப புத்தாண்டுப் பிறப்பு மாலை வேளைக்கு சென்றுவிட்டது. இன்றும் மேற்கு திசை நோக்கி எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு இடம்பெறுகிறது. அது சம்பந்தமாகவும் கருத்து வேறுபாடு இருக்கின்றது. ஆனாலும், நாங்களும் அதனை எடுத்துள்ளோம்.” என்றார்.

0 Responses to புத்தாண்டின் சுப நேரம் அரசாங்கத்தின் தேவைக்கேற்ப கணிக்கப்பட்டுள்ளது: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com