Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தினை அரசியல் பலமாக மாற்றுமாறு தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் தான் பலமுறை கோரிக்கை விடுத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் கூறியுள்ளதாவது, “தலைவர் தம்பி பிரபாகரனை 2009க்கு முன்னர் பலதடவைகள் கிளிநொச்சியில் சந்தித்திருக்கிறேன். அவர், 1980களில் இளைஞராக இருந்த காலங்களிலும் கூட நான் சந்தித்திருக்கிறேன். அவரோடு, அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியல் ரீதியாக உரையாடல்களை நிகழ்த்தியுள்ளேன்.

குறிப்பாக, 2000ஆண்டுகளில் தம்பி பிரபாகரனுடனான சந்திப்பின் போது, புலிகளின் இராணுவப் பலத்தினாலேயே அரசாங்கம் பேச்சுக்களுக்கு இணங்கியது என்று அவர் என்னிடம் தெரிவித்தார். நான், அதனை மறுக்கவில்லை. அதுதான், உண்மை என்பதை அவரிடத்தில் கூறினேன். அத்தோடு, இராணுவ பலத்தை அரசியல் பலமாக மாற்றவேண்டும் என்றும் கூறினேன்.

தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அரசியல் தீர்வில் விடுதலைப் புலிகள் இயக்கமும் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்று நாம் கருதினோம். தமிழ் மக்களுக்கு நியாயமான நிரந்ரமான தீர்வு ஒன்று கிடைத்தால், அது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு கிடைத்த நியாயமாகவே அமையும்.” என்றுள்ளார்.

0 Responses to தம்பி பிரபாகரனை பல தடவைகள் சந்தித்துள்ளேன்; அவரிடம் இராணுவ பலத்தை அரசியல் பலமாக மாற்றுமாறு கோரினேன்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com