யாழ்ப்பாணத்திலுள்ள இந்துக் கோவில்களில் மிருகங்களை பலியிட்டு வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவினை நேற்று வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது.
கோவில்களில் மிருகங்களை பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகாசபை தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவை நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார்.
இறைச்சிக்கடைச் சட்டத்தின் கீழேயே இந்த வேள்விகளுக்கான ஆடு, கோழி என்பவற்றை வெட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுவதனால், ஆலயங்களுக்கு அத்தகைய அனுமதி வழங்குவது சரியானதா என்றும், மிருக பலி கொடுத்து வேள்வி நடத்தும் ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் கோவில் நடத்துகின்றார்களா அல்லது இறைச்சிக்கடை நடத்துகின்றார்களா என்றும் நீதிபதி தனது உத்தரவில் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

0 Responses to யாழ். கோவில்களில் மிருக பலிக்கு இடைக்காலத் தடை; நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு!