Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் பழையனவாக இருக்க வாய்ப்பில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டாலும் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விழிப்புடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியம். ஆனாலும், புலனாய்வு பிரிவு தற்போது முறையாக செயல்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கில் வெடிபொருட்கள் மீட்கப்படும் சம்பவங்களை சிறு விடமாக எடுத்துக்கொள்ளாமல், அது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புலனாய்வு பிரிவுகளிலிருந்த மூத்த அதிகாரிகள் தற்போது அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளனனர். இதன் காரணமாக தேச பாதுகாப்பு குறித்த முக்கிய புலனாய்வுத் தகவல்கள் சரிவர கிடைக்கப்பெறாத சூழல் நாட்டில் நிலவுகிறது என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் முழுமையான விசாரணை முறையான வகையில் முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே, மக்களிடம் தேசியப் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to சாவகச்சேரியில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் பழையனவாக இருக்க வாய்ப்பில்லை: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com