புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மாஅதிபரான பூஜித ஜயசுந்தரவை நியமிப்பதற்கான ஆலோசனையை அரசியலமைப்பு சபை முன்மொழிந்துள்ளது.
அதற்கமைய, அவரை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கான ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபரான என்.கே.இளங்ககோன் தனது 36 வருட பொலிஸ் சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றதை அடுத்து, ஏற்பட்ட இடத்திற்கே பூஜித ஜயசுந்தர நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த வாரம், பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க நியமிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to புதிய பொலிஸ்மா அதிபராக பூஜித ஜயசுந்தர நியமனம்?