சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளோடு மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று நல்லாட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நேற்று திங்கட்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் குறிப்பிட்டள்ளதாவது, “பிறந்துள்ள புதுவருடம் சிறப்பாக அமையவில்லைபோல்தான் தெரிகின்றது. நாட்டின் சகல துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக சரிவை நோக்கிப் பயணிக்கின்றது. இந்நிலைமையில் இருந்து தப்ப வேண்டுமானால் சீனாவுடன் மோதக்கூடாது.
சீனா மட்டுமல்ல ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனும் நட்புறவைப் பேணவேண்டும். எமது ஆட்சியில் மேற்படி நாடுகள் உதவி வழங்கின. உலக வங்கிகூட வலிந்து வந்து உதவி வழங்கியது. இதேவேளை, முன்னாள் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில் குறைபாடுகள் இருப்பின் அவற்றைத் தேடிப்பார்த்து நிவர்த்தி செய்யுங்கள். முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டாம்.” என்றுள்ளார்.

0 Responses to சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளோடு மோதல் போக்கு வேண்டாம்; அரசுக்கு மஹிந்த ஆலோசனை!