Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டது எந்த சட்டத்தின் அடிப்படையில் என்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் சஞ்சய் தத், மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது தடை செய்யப்பட்ட வெடிப் பொருட்கள்,ஆயுதங்கள் வைத்திருந்தார் என்கிற குற்றம் உறுதி செய்யப்பட்டு, 5 வருடம் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், தண்டனைக் காலம் முடியும் முன்னரே சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார். இவர் எந்த சட்டத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார் என்பன உள்ளிட்ட 4 கேள்விகளை முன்வைத்து பேரறிவாளன் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், இதற்கு பதில் வராத நிலையில் மீண்டும் கடந்த 7ம் திகதி அதே 4 கேள்விகளை முன்வைத்து பேரறிவாளன் வேலூர் சிறைக் காவல் துறை கண்காணிப்பாளர் மூலம் கடிதம் எழுதியுள்ளார். இதில், சஞ்சய் தத்தை விடுதலை செய்தது போல இன்னும் எத்தனை பேரை கடந்த 20 ஆண்டுகளில் மத்திய அரசு விடுதலை செய்துள்ளது என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளார் பேரறிவாளன் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to சஞ்சய் தத் விடுதலை எந்த சட்டத்தின் அடிப்படையில்?: பேரறிவாளன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com