Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் நுணாவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை சிவில் உடையணிந்து வந்த சிலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வானொன்றில் கடத்திச் சென்றுள்ளனர்.

இளம் குடும்பஸ்தரின் வீட்டிற்கு சென்ற குறித்த நபர்கள் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாக தெரிவித்து தன்னுடைய மகனை விலங்கிட்டு அழைத்துச் சென்றதாக, கடத்தப்பட்டுள்ளவரின் தாயார் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினைச் செய்ய சென்ற போதும், அங்கு தன்னுடைய முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் தாயார் கூறினார்.

அத்தோடு, தன்னை வவுனியாவிலுள்ள அலுவலகமொன்றுக்கு வருமாறு கோரப்பட்டதாகும், அங்கு தான் சென்ற போது, தன்னுடைய மகனை பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றியுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் அவர் பிடித்துச் செல்லப்பட்டமைக்கான காரணம் வெளிவரும் என்று தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கடத்தப்பட்டவரின் தாயார் தெரிவித்தார்.

0 Responses to நுணாவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் வானில் கடத்தல்? - பூஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com