தமிழ் மாநில காங்கிரஸ் குறித்து யாரும் கவலைக்கொள்ளத் தேவையில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ், தங்களது கூட்டணியில் இணைய வேண்டும், என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் கோரிக்கை வைத்த நிலையில், இதற்கு பதில் அளித்துள்ளார் ஜி.கே.வாசன். தமது கட்சி காங்கிரஸிலிருந்து பிரிந்து வெகு தூரம் சென்று விட்டது என்று கூறியுள்ளார்.
எனவே, இப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்பது தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது என்றும், இதனால் கட்சியின் நலனில் கவனம் செலுத்தி வரும் தங்களின் கட்சிக் குறித்து யாரும் கவலைக் கொள்ளத் தேவையில்லை என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இதற்கிடையில் இவர் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியில் இணைய உள்ளார் என்றும்,இன்று மாலை இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to தமிழ் மாநில காங்கிரஸ் குறித்து யாரும் கவலைக்கொள்ளத் தேவையில்லை: ஜி.கே.வாசன்