Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானங்களை ஏற்காமல், தான்தோன்றித்தனமாக செயற்படும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருக்கும் இடையில் கடந்த வாரம் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

“சுதந்திரக் கட்சிக்குள் இருந்துகொண்டே கட்சிக்கு விரோதமாக செயற்பட்டு வருபவர்களுக்கும், அவ்வாறு செயற்பட்டுவரும் கட்சி உறுப்பினர்கள் அல்லாத வெளியாருக்குத் தூபமிட்டு வருபவர்களுக்கும், கட்சியின் மத்திய நிறைவேற்றுக் குழுவின் தீர்மானங்களைப் புறக்கணித்துக்கொண்டு தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் எதிராக விரைவில் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்தின் போது தெரிவிருப்பதாக, சந்திப்பில் கலந்து கொண்டவர்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

0 Responses to தீர்மானங்களை ஏற்காத சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை: ஜனாதிபதி தீர்மானம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com