வருகிற 9ம் திகதி முதல் மே மாதம் 12ம் திகதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்று அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
வருகிற மே மாதம் 16ம் திகதி தமிழக சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் துவங்கி உள்ளன. அதிமுகவின் தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியான நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கைகளைத் துவங்கி உள்ளார், அக்கட்சிய்டின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இவர் தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற 9ம் திகதி முதல் மே மாதம் 12ம் திகதி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 9ம் திகதி தமது தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கும் ஜெயலலிதா, மே மாதம் 12ம் திகதி வேலூரில் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள உள்ளார்.
தஞ்சாவூர், சேலம், திருச்சி, கோவை, காஞ்சீபுரம், கரூர் என்று அங்கங்கு பிரச்சாரங்கள் மேற்கொள்ளும் ஜெயலலிதா, அருகருகில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் ஒரே மேடையில் ஆதரவு தெரிவித்து வாக்குச் சேகரிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to முதல்வர் ஜெயலலிதா வருகிற ஒன்பதாம் திகதி முதல் தேர்தல் பிரச்சாரம்