Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தானில் பெருவெள்ளம்

பதிந்தவர்: தம்பியன் 05 April 2016

பாகிஸ்தானில் ஏற்பட்ட கனவெள்ளம் காரணமாக,  ஏற்பட்ட நிலச்சரிவுகளில் பல பொது மக்கள் பலியாகியிருப்பதாகத் தெரிய வருகிறது.

செய்திச் சேவைகளின் பிந்திக்கி கிடைத்த தகவல்களின்படி, இதுவரையில் 60 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அறியப்படுகிறது. பாகிஸ்தானில் பருவமழைக் காலம் இன்னும் தொடங்கா போதிலும்,  முன்னதாகப் பெய்யத் தொடங்கிய கனமழைகாரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ளத்திலும், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவினாலுமே, பலர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

பாகிஸ்தானின் கிராமப்புறங்களில்  அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருப்பதன் காரணமாகவே அதீத உயிரிழ்ப்புக்கள் ஏற்படுவதாகவும், பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்திலேயே அதிக உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளதாகவும், செய்தித்தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள  மக்களை,  பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அரச அதிகாரிகள் அறிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

0 Responses to பாகிஸ்தானில் பெருவெள்ளம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com