கடல் வழியாக இலங்கைக்குள் ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை கட்டுப்படுத்தும் முகமாக வடக்கு கடலில் வரும் படகுகளை சோதனையிட வேண்டும் என்று யாழ். மேல் நீதிமன்றம் கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
தெற்கு கடற்பகுதியில் ஈரானுக்கு சொந்தமான கப்பல் ஒன்றிலிருந்து 75 இலட்சம் அமெரிக்க டொலர் சந்தை மதிப்புமிக்க ஹெரோயின் கைப்பற்றப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையிலேயே யாழ். மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
ஊர்காவற்றுறை தொடக்கம் தலைமன்னார் வரையிலும் மற்றும் பருத்தித்துறை வழியாக முல்லைத்தீவு வரையான இலங்கையின் வடக்கு கடல் எல்லைக்குள் பயணிக்கும் படகுகள் அனைத்தும் சோதனையிடப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதற்கு போதைப் பொருள் பணியகம் விசேட கடலோர காவல்துறை படை ஒன்றை ஏற்படுத்தி கடல் மற்றும் கரையிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என இலங்கை பொலிஸ்மா அதிபருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பரிந்துரைத்துள்ளார்.
இந்தியாவிலிருந்து இலங்கையின் வடக்கு பகுதியினுள் கடத்தி வரப்பட்ட பெருமளவு கஞ்சாவை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பில் பலர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர்.
வடக்கு பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மையமாக யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகள் உள்ளதாக தெரிவித்த நீதிபதி, இங்கு கடத்தி வரப்படும் கஞ்சா, ஹெரோயின் ஆகிய போதைப் பொருட்களில் 75 வீதமானவை நாட்டின் தெற்கு பகுதிக்கு கடத்திச் செல்லப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 3 மாதங்களினுள் 155 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் கிட்டத்தட்ட 700 கிலோ கஞ்சா ஆகியன இலங்கைக்குள் கடத்தி வரப்பட்டுள்ளமை கண்ணடறியப்பட்டுள்ளது.

0 Responses to போதைப்பொருள் கடத்தல்; வடக்கு கடலில் படகுகளை சோதனையிட யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவு!