ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) பத்மநாபா அணி, கட்சியின் பெயரில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்பிரகாரம், கட்சியின் பெயரில் உள்ள ‘ஈழம்’ மற்றும் ‘புரட்சி’ என்ற இரு சொற்களையும் நீக்கிவிட அந்தக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும், 'தமிழ்ச் சமூக ஜனநாயகக் கட்சி' என்ற பெயரில் அக்கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, இரண்டு பிரிவுகளாக இயங்குகின்றது. இதில் ஒரு பிரிவினரான பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியே கட்சியின் பெயரில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துகொண்டுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுரேஷ் அணி, பெயர் மாற்றத்தை செய்யவில்லை.

0 Responses to ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா அணி) 'தமிழ்ச் சமூக ஜனநாயகக் கட்சி'யாகின்றது!