Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்காக பொதுவான ஒருநாள் பிரகடனம் செய்யப்பட வேண்டும். அத்தோடு, நினைவுத்தூபி அமைக்கப்பட்டு, அதனை புனித பூமியாக அறிவிக்க வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதனை, வலியுறுத்தும் முகமாக பாராளுமன்றத்தில் எதிர்வரும் நாட்களின் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “துட்டகைமுனு எல்லாளனை போரில் வெற்றிகொண்ட பின்னர் எல்லாளனின் வீரத்தை மதித்து எல்லாளனுக்கு சிலை அமைத்து மதிப்பளித்த போன்று போரில் இறந்தவர்களை நினைவுகூரும் சிலை அமைக்க வேண்டும் என்று பிரேரணையில் கோரவுள்ளேன்.” என்றுள்ளார்.

0 Responses to போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com