Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுமதிப்பது தொடர்பில் புதிய தேசிய கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுமதிப்பது தொடர்பில் இதுவரையில் எல்லா அரசாங்கங்களும் எடுத்த தீர்மானங்கள் வெற்றியளிக்கவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது தொடர்பில் எல்லா அரசாங்கங்களும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியமையையும் நினைவுகூர்ந்துள்ளார்.

பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுமதிப்பது தொடர்பில் பெற்றோர் போராட வேண்டியிருப்பின் அது எல்லா அதிகாரிகளினதும் கவனத்தைப்பெறவேண்டிய ஒரு விடயமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பிரபல பாடசாலைகளில் கிடைக்கக்கூடிய எல்லாவற்றையும் ஏனைய எல்லா பாடசாலைகளிலும் கிடைக்கச் செய்வதற்கு ஒரு அரசாங்கம் என்றவகையில் தற்போதைய அரசாங்கம் எல்லா அர்ப்பணிப்புகளையும் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to பிள்ளைகளுக்கான பாடசாலை அனுமதி தொடர்பில் புதிய தேசியக் கொள்கை: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com