Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா கோவில்குளம் பகுதியில் வைத்து நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை கடத்தப்பட்ட அரிசி ஆலை உரிமையாளரான சண்முகம் செல்வராசா நேற்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா- மன்னார் வீதியில் உள்ள பூவரசங்குளம் பகுதியில் கடத்தல்காரர்கள் இவரைக் கொண்டு வந்து வாகனம் ஒன்றில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலையாகிய வர்த்தகரிடம் கடத்தல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும், அதுபற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

0 Responses to வவுனியாவில் கடத்தப்பட்ட வர்த்தகர் விடுதலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com