தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு நியமிக்கப்படாவிட்டால், தகவல் அறியும் சட்டம் பயனற்றுப் போய்விடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் சட்டமூலத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் அதேவேளை, அதில் சில விடயங்களில் தெளிவற்ற தன்மை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைய தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவை நியமிக்கும் போது மூன்று நிறுவனங்களால் அதற்குரிய உறுப்பினர்களை அரசியலமைப்புப் பேரவைக்கு பெயர் குறித்து பிரேரிக்க வேண்டிய அவசியமாகிறது.
அந்த நிறுவனங்களில் முதலாவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அது ஒரு நிறுவனம் என்பதால் சிக்கல் எதுவுமின்றி உறுப்பினர் ஒருவரை பெயர் குறித்து பிரேரிக்கலாம்.
அடுத்து வெளியீட்டாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக அமைப்புகளும் மூன்றாவதாக சிவில் சமூக அமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் இந்த ஒவ்வொரு நிறுவனங்கள் சார்பில் பல அமைப்புகள் உள்ளடங்குவதால் அந்நிறுவனங்கள் சார்பாக ஒவ்வொரு உறுப்பினர்களை பெயர் குறித்து பிரேரிப்பது எவ்வாறு என்பது தெளிவற்றது. இந்த வகையில் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு நியமிக்கப்படாவிட்டால் சட்ட மூலம் முற்றாக பயனற்றதாகவிடும்.” என்றுள்ளார்.

0 Responses to முறையான ஆணைக்குழு நியமிக்கப்படாவிட்டால் தகவல் அறியும் சட்டம் பயனற்றுப் போய்விடும்: சுமந்திரன்