எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“இனிமேல் ஐக்கிய தேசியக் கட்சியே எனது கட்சியாகும். எனது தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவாகும். ஆகையால் நான் ஏமாற்றும் செயற்பாடுகளில் ஈடுபடமாட்டேன். 2020 ஆம் ஆண்டு நாட்டின் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியே தீரும். அதற்காக முழு மூச்சுடன் நான் செயற்படுவேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணையும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று வியாழக்கிழமை சிறிகொத்தாவில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளதாவது, “மஹிந்த சிந்தனையை கொண்ட பூதங்கள் மீளவும் உயிர்த்தெழ ஆரம்பித்துள்ளன. ஆகையால் இந்த பூதங்களை விரட்டியடித்து நல்லாட்சியை ஏற்படுத்த அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி எனக்கு பாரியளவில் உதவிகளையும் ஒத்தாசைகளையும் புரிந்துள்ளது. என்னை அரசியலில் பிரவேசிக்க வைத்த பெருமை ஐக்கிய தேசியக் கட்சியையே சாரும். ஆகவே இந்த கட்சிக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளே எனக்கு அதிகளவில் கிடைக்கப் பெற்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல தருணத்தில் எனக்கு ஆதரவு வழங்கி செயற்பட்டிருந்தார்.
எனினும், குறித்த தேர்தலில் என்னால் வெற்றி பெற முடியாமல் போனாலும் எனது கொள்கைகளும் நோக்கங்களும் தற்போது அமுலாகியுள்ளமை பராட்டத்தக்கது. நாட்டில் ராஜபக்ஷ குடும்ப ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, ஊழல் மோசடி இல்லாமல் ஆக்கப்பட்டு, நல்லாட்சி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எனது நோக்காக இருந்தது. ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியில் அது நிறைவேறியுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to 2020 ஆட்சியையும் ஐ.தே.க கைப்பற்றும்: பொன்சேகா