ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதானமாக செயற்பட்டு திருப்திகரமான வெற்றிகளைப் பெற்றுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன், இலங்கை தொடர்பில் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையையும், இலங்கை தொடர்பான அமர்வில் பங்கேற்ற மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தெரிவித்த கருத்துகளையும் நான் மனதார வரவேற்கின்றேன். உண்மையை நிலைநாட்டும் வகையில் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையும், உறுப்பு நாடுகளின் அழுத்தமும் அமைந்துள்ளன.
ஐக்கிய நாடுகள் தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதானமாக இந்தக் கருமத்தைக் கையாண்டது. அதில் திருப்திகரமான வெற்றியையும் கூட்டமைப்பு பெற்றுள்ளது. மேலும், நாம் இதனை நிதானமாக முன்னெடுக்க வேண்டிய சூழலில் இருக்கின்றோம். மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படியும், உறுப்பு நாடுகள் தெரிவித்ததன் அடிப்படையிலும் இலங்கை அரசாங்கம் செயற்படவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to ஜெனீவாவில் த.தே.கூ நிதானமாக செயற்பட்டு திருப்திகரமான வெற்றியைப் பெற்றுள்ளது: சம்பந்தன்