இந்திய இழுவைப் படகுகள் இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கண்டித்து வடக்கு மாகாண மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து வடக்கு மாகாண சபையின் முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டப் போராட்டமொன்றை முன்னெடுத்தன.
இந்திய இழுவைப் படகுகளை இலங்கைக் கடற்பரப்பில் அனுமதிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆலோசித்து வருவதாக குற்றஞ்சாட்டிய மீனவர்கள், தமது வயிற்றில் அடிக்க வேண்டாம் என்றும் கோசம் எழுப்பினர்.
இந்திய இழுவைப் படகுகளை அனுமதிக்க வேண்டாம் என்கிற தமது கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளியுள்ளதாகவும் வடக்கு மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

0 Responses to இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து வடக்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!