ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என்று முன்னாள் ஜனாதிபதியும், நாமல் ராஜபக்ஷவின் தந்தையுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்கு பார்வையிட சென்ற போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இன்னும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இப்பொழுது நாமலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இப்படியே அடுத்தடுத்து கைதுகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கும். ஏனென்றால் இது முற்றிலும் அரசியல் பழிவாங்கல். அரசாங்கம் நீதியை நிலைநாட்ட இவ்வாறு செய்வதாக கூறுகிறது. ஆனால் ஒருதரப்பினருக்கு மட்டும் நீதியை செயற்படுத்தக்கூடாது. எல்லா தரப்பினருக்கும் சமமாக நீதி கிடைக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to நாமலின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மஹிந்த