Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில, இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 5 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய வர்த்தகரான ப்ரயன் செடிக் என்பவருக்கு சொந்தமான 110 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகள், போலி அட்டோனி அனுமதிப்பத்திரம் மூலம் உதய கம்மன்பிலவினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ப்ரயன் செடிக் என்பவரின் அட்டோனி அனுமதிப்பத்திர உரிமையாளரான லசித பெரேராவினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டில் உதய கம்மன்பில கைது செய்யப்பட்டிருந்தார்.

0 Responses to மோசடிக் குற்றச்சாட்டில் கைதான உதய கம்மன்பில பிணையில் விடுதலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com