ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன எதிர்வரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சரான எஸ்.எம்.சந்திரசேன, கடந்த பொதுத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். எனினும், அவர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாமல், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்து வந்தார்.
இந்த நிலையில், அவர் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்ததாகவும், அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப் பீடமும் இணங்கியுள்ளதாக தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை தனது சகோதரரான எஸ்.எம்.ரஞ்சித்திற்கு வழங்குமாறு எஸ்.எம்.சந்திரசேன, ஐக்கிய தேசியக் கட்சியிடம் நிபந்தனை முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மஹிந்த அணியின் முக்கியஸ்தருமான பந்துல குணவர்த்தனவும் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைவது தொடர்பில் முனைப்புக் காட்டி வருவதாகவும், ஆனாலும் அவருக்கான கதவு திறக்கவில்லை என்றும் தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 Responses to மஹிந்த அணியினரும் யானையில் சவாரி?