Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதித்துறையின் பங்களிப்ப அவசியம் என்று கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் ஸ்காபரோ தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள ஹரி ஆனந்தசங்கரி, நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்திப்புப் பேசினார். அதன்பின்னர், ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கை உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். இதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கவேண்டும்.” என்றுள்ளார்.

இலங்கையில் பிறந்த ஹரி ஆனந்தசங்கரி, இருபது வருடங்களுக்கும் அதிகமான காலமாக கனடாவில் வசித்து வருகின்றார். அவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் மகனாவார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பு அவசியம்: ஹரி ஆனந்தசங்கரி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com