காணாமற்போனோர் தொடர்பில் தனிப்பணியகமொன்றை அமைப்பதன் மூலம், நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த இராணுவத்தினரை பலியிட அரசாங்கம் முயல்கின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவங்ச மேலும் கூறியுள்ளதாவது, "காணாமற்போனோர் தொடர்பான தனிப்பணியகத்தை அமைப்பதற்கான சட்ட மூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இது நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த இராணுவத்தினரை பலி கொடுக்கும் ஒரு செயற்பாடாகும்.
கடந்த அரசாங்கத்தினால் காணாமற்போனோரை கண்டறிவது குறித்து ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களை உள்ளடக்கிய பிரதேசங்களுக்கு சென்று விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கையொன்றையும் அந்த ஆணைக்குழு சமர்ப்பித்திருந்தது.
இவ்வாறு இருக்கையில் தற்போது புதிய அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்வதானது மேற்கத்தேய நாடுகளின் தூண்டுதல்களின் அடிப்படையில் இராணுவத்தினரை பலி கொடுக்கும் செயலாகும்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவத்தினரை பலியிட அரசாங்கம் முயல்கின்றது: விமல் வீரவங்ச