Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருவண்ணாமலையில் காவலர்களால் ஆட்டோ ஓட்டுநர் ராஜா குடும்பம் தாக்கப்பட்ட வழக்கில் ஆர்.டி.ஓ விசாரணை நியாயமான முறையில் நடைப்பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11ம் திகதி திருவண்ணாமலையில் குடும்பத்த தகராறு அதுவும் வாய்த் தகராறு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஆட்டோ ஓட்டுநர் ராஜா குடும்பத்தினர் சொல்லியும், காவலர்கள் 3பேர் அவர்களை கடுமையாகத் தாக்கினர். இது சமூக வலை தளங்கள் மற்றும் ஊடகங்களில் காணொளி காட்சியாக தமிழகம் முழுவதும் வலம் வந்தது. இதையடுத்து ராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.தங்களது குடும்ப சண்டையை பெரிதுபடுத்தி, தங்களை அவமானப் படுத்தும் வகையில் சாலையில் அடித்த காவலர்களின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது என்றும், காவலர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்றும் ராஜா மனுவில் கோரிக்கை வைத்தருந்தார்.

தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், போலீசார் மீது ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்றுக் கொண்டுள்ளது என்று கூறினார். இதையடுத்து இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஆர்.டி.ஓ விசாரணை நியாயமாக நடைபெற்றால் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், விசாரணையை விரைவில் முடித்து 2 வாரங்களுக்குள் தமிழக அரசு அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதோடு, தங்களுக்கு சென்னை அரசு மருத்துவனையில் இல்லாது,திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று, ராஜா குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதை அடுத்து, நீதிபதிகளும் மனுதாரரின் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்தனர். அவர்கள் உடல்நலம் தொடர்பாகவும், அவர்கள் எப்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பலாம் என்பது தொடர்பாகவும், அந்த மருத்துவமனை மருத்துவர்கள் தீர்மானிக்கலாம் என்றும் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

0 Responses to ஆட்டோ ஓட்டுநர் ராஜா குடும்பம் தாக்கப்பட்ட வழக்கில் ஆர்.டி.ஓ விசாரணை நியாயமான முறையில் நடைப்பெற வேண்டும்: நீதிபதிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com