Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“இலங்கையில் சிங்களமும், தமிழும் உத்தியோகபூர்வ மொழிகளாக உள்ளன என்பதை நாங்கள் கூறுகின்றோம்” என்று தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனிச்சிங்களத்தில் அனுப்பிய கடிதமொன்றை இன்று புதன்கிழமை திருப்பி அனுப்பியுள்ளனர். 

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் நீதியான விசாரணை கோரி வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மகஜரொன்றை நேற்று முந்தினம் திங்கட்கிழமை அனுப்பியிருந்தது.

அந்த மகஜர் தொடர்பில் பதிலளித்து கடிதமொன்றை தனிச்சிங்களத்தில் அனுப்பி வைத்துள்ள ரெஜினோல்ட் குரேக்கு, “நீங்கள் இங்கு கூறுவது என்னவென்று எமக்கு புரியவில்லை. இலங்கையில் சிங்களமும், தமிழும் உத்தியோகபூர்வ மொழிகளாக உள்ளன என்பதை நாங்கள் கூறுகின்றோம்” என்று குறிப்பிட்டு கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளனர்.

0 Responses to தனிச்சிங்களத்தில் கடிதம் அனுப்பிய ரெஜினோல்ட் குரே; திருப்பி அனுப்பிய பல்கலைக்கழக மாணவர்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com