யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைள் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகள் முழுமையாகப் பூர்த்தியடைந்ததும், சுயாதீன விசாரணையொன்றை நடத்துவதா என்பது பற்றி அரசாங்கம் தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பில் 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தமை குறித்து கவலையளிப்பதுடன், இந்தச் செய்தி சகலரையும் அதிர்ச்சியடையச் செய்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

0 Responses to பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை: ரணில்