Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பனி யுத்தத்துக்குப் (Cold War) பின்னர் முதன் முறையாக போலந்தில் உள்ள ரஷ்ய எல்லைகளில் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த நாடுகளான பிரிட்டன், அமெரிக்கா, ஜேர்மனி,  கனடா ஆகியவை தமது போர் விமானங்களையும், யுத்த டேங்கிகளையும் ஆர்ட்டிலரி மற்றும்  படை வீரர்களையும் அனுப்பவுள்ளன.

இதனால் ரஷ்யா அதிருப்தி அடைந்துள்ளது. நேட்டோவின் இந்த முடிவை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. மேலும் அடுத்த வருடம் ரோமானியாவுக்குத் தனது யுத்த விமானங்களை அனுப்பவுள்ளதாக புதன்கிழமை பிரிட்டனும் தெரிவித்துள்ளது. அண்மையில் ஏவுகணைகளுடன் கூடிய ரஷ்ய யுத்தக் கப்பல்கள் சுவீடனுக்கும் டென்மார்க்குக்கும் இடைப்பட்ட பால்டிக் கடலில் நுழைந்தது கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கிடையே அழுத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. அதே தினம் புருஸ்ஸெல்ஸில் ஜேர்மனி, கனடா மற்றும் ஏனைய நேட்டோ நட்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தனர். இந்நிலையில் ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கத் தலமான செவுட்டா (Ceuta)இல் இருந்து தனது 3 யுத்தக் கப்பல்களை  மீளப் பெறுமாறு விடுக்கப் பட்ட வேண்டுகோளை ரஷ்யா நிராகரித்து இருப்பதாகவும் இக்கப்பல்கள் சிரியாவில் உள்ள பொது மக்களைக் குறி வைத்துத் தாக்கக் கூடியவை என  நேட்டோ எச்சரித்திருப்பதாகவும் மேட்ரிட் இல் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த யுத்தக் கப்பல்கள் 8 கேரியர் வகை பேட்டில் கப்பல்களில் அடங்குபவை என்றும் ரஷ்யாவின் விமானம் தாங்கி யுத்தக் கப்பலான அட்மிரல் குஷ்னெட்சோவ் சிரிய கடற்பரப்பிலுள்ள ஏனைய 10 ரஷ்யக் கப்பல்களுடன் சேரவுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் ரஷ்யா அணுவாயுதத்தைத் தாங்கிச் செல்லவல்ல இஸ்கண்டெர் ஏவுகணைகளை கலினிங்ராட்டுக்கு அனுப்பியிருப்பதாகவும் இது அமெரிக்காவுடனான புளுட்டோனிய ஆயுத ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று கூறப்படுவதுடன் உக்ரைனிலுள்ள கிளர்ச்சிப் படையினருக்கு ரஷ்யா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவும் மேற்குலகை அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

இதேவேளை சமீபத்தில் ரஷ்யாவும் இந்தியாவும் சுமார் 43 000 கோடி ரூபாய் பெறுமதியான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to போலந்தை நோக்கி படை நகர்வை மேற்கொள்ளவிருக்கும் நேட்டோ (NATO) : ரஷ்யா அதிருப்தியில்..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com