Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 08.00 மணியளவில் இலக்கத்தகடற்ற வாகனமொன்றில் வந்தவர்களினால் இளைஞர்கள் மூவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். 

அத்துடன், இளைஞர்களின் மோட்டார் சைக்கிளை வாளினால் வெட்டி சேதமாக்கியுள்ளனர். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சங்கரராஜா சந்திரசேகரன், காக்கை தீவு பகுதியை சேர்ந்த பாலசிங்கம் செல்வம் மற்றும் அமரசிங்கம் ஞானவேல் ஆகியோரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இளைஞர்களாவர்.

இதனிடையே, பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரான விஜயகுமார் சுலக்சன் வீட்டுக்கு அருகில் (கந்தரோடை) கூடியிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உறவினர்கள் மீதும் நேற்று இலக்கத்தகடற்ற வாகனமொன்றில் வந்தவர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

படம் - கோப்பு

0 Responses to ஆனைக்கோட்டை மற்றும் கந்தரோடைப் பகுதிகளில் இலக்கத்தகடற்ற வாகனத்தில் வந்தவர்களினால் தாக்குதல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com