கூகுள் இணையதளத்தில் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி என அதிகம் தேடியவர்களில் குஜராத் மாநிலம் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் பின் வரிசையில் இடம் பிடித்துள்ளன.
ரூ.500 மற்றும் 1,000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 7ம் தேதி (நவ.,7) அறிவித்தார். இது நவ.,8 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும் அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்நிலையில், கூகுள் இணையதளத்தில் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி என அதிகம் பேர் தேடியுள்ளனர். கடந்த 7 நாட்களில் கறுப்பை வெள்ளையாக்குவது குறித்து தேடியவர்களில் குஜராத் மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அடுத்த இரு இடங்கள் முறையே ஜார்கண்ட் மற்றும் அரியானா மாநிலங்கள் வகிக்கின்றன.
இப்பட்டியலில் 4 முதல் 10 இடங்கள் முறையே மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், டில்லி மற்றும் உத்திரகண்ட ஆகிய மாநிலங்கள் வகிக்கின்றன. தமிழகம் இப்பட்டியலில் பின்வரிசையில் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு 22வது இடமும், கேரளா 23வது இடமும் வகிக்கின்றன.

0 Responses to கறுப்பை வெள்ளையாக்குவது எப்படி?; கூகுள் தேடலில் முதலிடத்தில் குஜராத்!