Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தான், ஈரான், சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய 5 நாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு வருபவர்களுக்கான விசாவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குவைத்.

கலாச்சார சட்டங்கள் மிக இறுக்கமாக உள்ள நாடான குவைத் 2011 ஆம் ஆண்டே சிரியாவில் இருந்து வருபவர்களுக்கு விசா மறுத்து சட்டம் இயற்றி இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை 7 முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு அதிபர் டிரம்ப் தடை விதித்ததுக்குக் கூறப்பட்ட காரணமான பிரிவினை வாத இஸ்லாமியத் தீவிரவாதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதைத் தடுப்பது என்பதையே குவைத்தும் காரணமாகக் கூறியுள்ளது.

டிரம்பினால் விதிக்கப் பட்ட தனிப்பட்ட உத்தரவு மூலம் உலகம் முழுவதிலும் இருந்து அகதிகள் 120 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிரம்பின் உத்தரவுக்குப் பிறகு சிரிய அகதிகளுக்கு விசா மறுத்துள்ள இன்னொரு நாடாக குவைத் மட்டுமே விளங்குகின்றது. 2015  ஆம் ஆண்டு குவைத்திலுள்ள ஷியா பள்ளி வாசல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானதில் 27 குவைத் குடிமக்கள் கொல்லப் பட்டிருந்தனர். இந்நிலையில் தனது இறுக்கமான கலாச்சார சட்டங்களால் பிற நாடுகளில் இருந்து அங்கு வருபவர்களுக்கு மிக மோசமான நாடுகளில் ஒன்றாக குவைத் விளங்குவதாக 2016 ஆம் ஆண்டு Expat insider என்ற அமைப்பினால் மேற்கொள்ளப் பட்ட சேர்வே ஒன்று கூறுகின்றது.

இதேவேளை டிரம்பினால் தடை செய்யப் பட்ட முஸ்லிம் நாடுகள் அதிகபட்ச முஸ்லிம் சனத்தொகை உடையனவாகவும் ஏதோ ஒரு வகையில் பொருளாதார மற்றும் இராணுவக் குழப்ப நிலையை எதிர்நோக்கி வருபவனவாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்காவை பின்பற்றும் குவைத் : 5 முஸ்லிம் நாடுகளுக்கான விசாவுக்குத் தடை விதித்தது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com